Posts

02. அறிவுறுத்தல்கள்

 [7:29 pm, 08/05/2026] Sri Shakthi Suman: இந்தப் புண்ணியமான சித்ரா பௌர்ணமியில் விதியை மாற்றி அமைக்கும் சித்ர குப்தனின் ஆசி பெறும் நாளில் நாம் விதியை மாற்றி அமைக்கும் சிவயோக சாதனையின் ஒரு அங்கமாக திருமந்திர அரண்மனை கட்டும் பணியை ஆரம்பிக்க அனைவரையும் அழைக்கிறோம். [7:29 pm, 08/05/2026] Sri Shakthi Suman: இந்தச் சாதனையின் சிறப்பம்சங்கள்: தினமும் ஒரு மந்திரம்: ஒவ்வொரு நாளும் ஒரு திருமந்திரம் சந்தி பிரித்து எழுத்துத் தவம்: அதனை ஒரு பிரத்யேக ஏட்டில் (Diary) உங்கள் கைப்பட எழுத வேண்டும். அகக் கட்டுமானம்: அன்றைய நாள் முடிவில் அந்த மந்திரம் உங்கள் அன்றாட வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஒரு வரியாவது குறித்து வைக்க வேண்டும். [7:29 pm, 08/05/2026] Sri Shakthi Suman: இது மிக உயரிய ஒரு தந்திர ரகசியம், திருமந்திரத்தின் எட்டாம் தந்திரத்தில் 2184 வது பாடலில் கூறப்படும் ஆறு அத்வாக்களின் இரகசியத்தை நாம் இப்போதே குருவருளால் பயிற் சிக்க ஆரம்பிக்கிறோம். [7:29 pm, 08/05/2026] Sri Shakthi Suman: இந்த சாதனைக் குழு ஏற்படுத்துவதின் ஒரு சூட்சும நோக்கம் உள்ளது. திருமந்திரத்தின் அனைத்துப் பகுதிகளும் ...

01. திருமந்திர அரண்மனை: சாதகர்களுக்கான நெறிமுறைகளும் உறுதிமொழியும்

 திருமந்திர அரண்மனை: சாதகர்களுக்கான நெறிமுறைகளும் உறுதிமொழியும் இந்த ஞானப் பயணத்தில் இணைய விரும்பும் சாதகர்கள் பின்வரும் நான்கு முக்கிய விதிகளைத் தனது சாதனையாக ஏற்று உறுதி பூண வேண்டும்: 1. மரபின் மீதான நம்பிக்கை (Faith in Tradition): திருமந்திரத்தின் மீதும், அதனை எமக்கு அருளிய திருமூலர் முதலான ரிஷி மற்றும் குரு மரபுகள் மீதும் முழுமையான நம்பிக்கையும், மதிப்பும் கொண்டவராக இருத்தல் வேண்டும். 2. தினசரி எழுத்துச் சாதனை (Daily Written Practice): ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தை அதன் அர்த்தம் விளங்கி, ஆழமான பாவனையுடன் (Feeling) தனது கைப்பட எழுதிப் பழகும் 'எழுத்துச் சாதனையை' எக்காரணம் கொண்டும் தடைபடாமல் செய்ய உறுதி ஏற்க வேண்டும். 3. தொடர் கற்றல் (Consistent Learning): தினசரி ஒரு மந்திரத்தையும், அதற்கான யோக ஆகம தந்திர விளக்கவுரையையும் முழுமையான கவனத்துடன் கற்று, அதன் உட்கருத்தை உள்வாங்கிக்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும். 4. அக அனுபவமே இலக்கு (Inward Experience as Goal): இந்தப் பயிற்சியின் நோக்கம் வெறும் அறிவுசார்ந்த தேடல் அல்ல; மாறாக, இதன் மூலம் தன்னுள் 'நந்தி' எனும் அந்தப் பரசிவ ...