02. அறிவுறுத்தல்கள்
[7:29 pm, 08/05/2026] Sri Shakthi Suman: இந்தப் புண்ணியமான சித்ரா பௌர்ணமியில் விதியை மாற்றி அமைக்கும் சித்ர குப்தனின் ஆசி பெறும் நாளில் நாம் விதியை மாற்றி அமைக்கும் சிவயோக சாதனையின் ஒரு அங்கமாக திருமந்திர அரண்மனை கட்டும் பணியை ஆரம்பிக்க அனைவரையும் அழைக்கிறோம். [7:29 pm, 08/05/2026] Sri Shakthi Suman: இந்தச் சாதனையின் சிறப்பம்சங்கள்: தினமும் ஒரு மந்திரம்: ஒவ்வொரு நாளும் ஒரு திருமந்திரம் சந்தி பிரித்து எழுத்துத் தவம்: அதனை ஒரு பிரத்யேக ஏட்டில் (Diary) உங்கள் கைப்பட எழுத வேண்டும். அகக் கட்டுமானம்: அன்றைய நாள் முடிவில் அந்த மந்திரம் உங்கள் அன்றாட வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஒரு வரியாவது குறித்து வைக்க வேண்டும். [7:29 pm, 08/05/2026] Sri Shakthi Suman: இது மிக உயரிய ஒரு தந்திர ரகசியம், திருமந்திரத்தின் எட்டாம் தந்திரத்தில் 2184 வது பாடலில் கூறப்படும் ஆறு அத்வாக்களின் இரகசியத்தை நாம் இப்போதே குருவருளால் பயிற் சிக்க ஆரம்பிக்கிறோம். [7:29 pm, 08/05/2026] Sri Shakthi Suman: இந்த சாதனைக் குழு ஏற்படுத்துவதின் ஒரு சூட்சும நோக்கம் உள்ளது. திருமந்திரத்தின் அனைத்துப் பகுதிகளும் ...