01. திருமந்திர அரண்மனை: சாதகர்களுக்கான நெறிமுறைகளும் உறுதிமொழியும்
திருமந்திர அரண்மனை: சாதகர்களுக்கான நெறிமுறைகளும் உறுதிமொழியும்
இந்த ஞானப் பயணத்தில் இணைய விரும்பும் சாதகர்கள் பின்வரும் நான்கு முக்கிய விதிகளைத் தனது சாதனையாக ஏற்று உறுதி பூண வேண்டும்:
1. மரபின் மீதான நம்பிக்கை (Faith in Tradition):
திருமந்திரத்தின் மீதும், அதனை எமக்கு அருளிய திருமூலர் முதலான ரிஷி மற்றும் குரு மரபுகள் மீதும் முழுமையான நம்பிக்கையும், மதிப்பும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
2. தினசரி எழுத்துச் சாதனை (Daily Written Practice):
ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தை அதன் அர்த்தம் விளங்கி, ஆழமான பாவனையுடன் (Feeling) தனது கைப்பட எழுதிப் பழகும் 'எழுத்துச் சாதனையை' எக்காரணம் கொண்டும் தடைபடாமல் செய்ய உறுதி ஏற்க வேண்டும்.
3. தொடர் கற்றல் (Consistent Learning):
தினசரி ஒரு மந்திரத்தையும், அதற்கான யோக ஆகம தந்திர விளக்கவுரையையும் முழுமையான கவனத்துடன் கற்று, அதன் உட்கருத்தை உள்வாங்கிக்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும்.
4. அக அனுபவமே இலக்கு (Inward Experience as Goal):
இந்தப் பயிற்சியின் நோக்கம் வெறும் அறிவுசார்ந்த தேடல் அல்ல; மாறாக, இதன் மூலம் தன்னுள் 'நந்தி' எனும் அந்தப் பரசிவ ஆனந்த நிலையை உணர்வதும், நேரடி அக அனுபவத்தைப் பெறுவதுமே எனது முதன்மையான நோக்கம் என்பதை உறுதிபடக் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment